Posts

எனக்கு பெயர் இட்டது எப்போது?

என் பெயர் விண்தாமரை. இந்த முறையில்  தான் என் பெயரை  எழுத  வேண்டுமென என் தாய் தந்தையர்  சொல்லிக் கொடுத்திருந்திருந்தனர். விண்தாமரை  நிலவு என பொருள் படும் என்று அப்பா  சொன்னார். முதலாம் ஆண்டு  முதல்  நாள் அதாவது, என் ஏழு  வயதில், வகுப்பு  ஆசிரியை நான் என்  பெயரை  பிழையாக எழுதுவதாகவும்  ‘விந்தாமரை’ என்று எழுதுவதுதான்  இலக்கணப்படி  முறையென்று  விளக்கினார்.. உன்  அப்பா  தவறாக  சொல்லி  கொடுத்திருக்கிறார் என்று  சொல்லி இனி  ‘ந்’ கொண்டே எழுத   வேண்டும் என்றார். அத்தோடு  நான் ஆறாம் ஆண்டு   பயிலும்  வரை எல்லா தமிழ் ஆசிரியர்களும் அறிஞர் பெரு மக்களும்  இதே  பாடலைப் பாடினர். நானோ மாற்றிக் கொண்டேன் இல்லை. ஆசிரியர்  கருத்தை மதிக்காத மாணவி இல்லை  நான். என்  பெயரில்  வரும்   மூன்று சுழி ‘ண்’  மிகவும் மங்களகரமாய் தோன்றிற்று அதனால் தான்.
அது என்னைப் பற்றி ஒரு சிறிய விளக்கம்.  கடந்த பதிவில் முகநூலில் ஒருவர்  அகத்தியரின் படத்தை ஏற்றம் செய்திருந்தார் என சொன்னேனே? படத்துடன் நாடி வாசிப்பை பற்றியும் எழுதி இருந்தார். உடனே நானும் எனக்கு இப்போதே நாடி படித்து ஆக வேண்டும் என்று சண்முகம் ஐயாவின் முகநூலுக்கு நாடி வா…

என் தேடல்

Image
எழுத வேண்டும் என்றே  ஆசையும்  கரு பொருளும்  என் சிந்தையின் கர்பத்திலே பல நாட்கள் கலைந்து விட்டது. கர்பம் கலைப்பது சரி அல்லவே ஆதலால் பிறப்பிற்க  முடிவு செய்து விட்ட  வேளை இதை எழுதி கொண்டு இருக்கிறேன்.   இன்னும்   ஒரு   காரணம்  என்னவென்றால்  இது  பற்றி எழுதாவிட்டால் என்  பிறப்பே பாழ் ஆகிவிடும்.
'என் தேடல்' என்று  இந்த படிவத்திற்கு  தலைப்பிட்டு கதையை... என் பயணத்தை தொடங்குகிறேன் .  என் சிறு வயது முதல் எதையோ ஒன்றை தேடிக்கொண்டிருப்பேன். கூட்டத்தில் யாரையோ, பேழைக்குள் எதையோ, சும்மா இருக்கும் போதும் யாருடைய வருகைக்கோ காத்துக்கொண்டிருப்பேன் மற்றும் எதோ ஒன்றை தொலைத்ததுபோல் தேடிக்கொண்டே இருப்பேன். அது என்னவென்று தெரிந்ததில்லை யாரிடமாவது சொல்லவேண்டும் என்ற அறிவும் அப்போது எனக்கு இல்லை. இப்படியே வருடங்கள் அனுபவங்ளாக கடந்து கொண்டிருந்தது. அனுபவங்கள் கசப்பாகவும் இனிமையாகவும் கலந்து இருந்தன. கசப்பான அனுபவங்கள் மனதை புல்லுருவி  போல் நச்சரிக்கும் போதெல்லாம் அந்த எதோ ஒன்றிடமே  கற்பனையில் புலம்பி தீர்த்துவிடுவேன். என்னவென்று தெரியாவிட்டாலும் வாய் பேசமுடியாமல் கண்ணீர் மட்டும் பேசும் தருணங்களில் அந…